முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்லூரி மாணவியை காரில் கற்பழித்த கும்பல்

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புவனேஸ்வர்,ஜூன்.16 - ஒரிசாவில் கல்லூரி மாணவியை லிப்ட் கொடுப்பது போல் ஏற்றி சென்று காரில் கற்பழித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புவனேஸ்வரில் ஒரு கல்லூரி மாணவி பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது ஒரு கார் அவர் அருகில் வந்து நின்றது. அவர்கள் அந்த மாணவியின் உறவினருக்கு நண்பர்கள் என்றதால் அந்த காரில் அவர் ஏறினார். கார் புவனேஸ்வரை விட்டு அதிக தூரம் சென்றதும் கார் நின்றது. அந்த மாணவியை காருக்குள் வைத்து அவர்கள் கற்பழித்து விட்டனர். கற்பழித்த பிறகு அந்த பெண்ணை நிர்வாணமாக தனது செல்போனில் ஒருவன் போட்டோ எடுத்தான். இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் நாங்கள் உனது படத்தை இன்டர்நெட்டில் போட்டு விடுவோம் என மிரட்டி அனுப்பினர். ஆனால் அதை பொருட்படுத்தாத அந்த மாணவி, நடந்த சம்பவம் குறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர். ஒருவன் பெயர் மனோரஞ்சன், மற்றொருவன் பெயர் தினா. இவர்கள் இருவரும் தொழிலதிபர்களின் மகன்களாவார்கள். 2 பேர் மீதும் கற்பழிப்பு, கடத்தல், மிரட்டல் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கற்பழிப்புக்கு ஆளான மாணவியும், குற்றவாளிகள் இருவரும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பரிசோதனைக்கு பிறகு குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony