முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சதீஷ்குமார் பிரேத பரிசோதனை பலத்த பாதுகாப்புடன் நடந்தது

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.16 - காணாமல் போய் பிணமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கறிஞர் சதீஷ்குமாரின் உடல் பிரேத பரிசோதனை நடந்தது. பின் அடக்கம் செயப்பட்டது. மருத்துவமனையில் வழக்கறிஞர்கள் போலீசை கண்டித்து கோஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை அண்ணா நகர் மேற்கு தங்கம் காலனியைச் சேர்ந்தவர் வக்கீல் சங்கரசுப்பு. இவரது மகன் சதீஷ்குமார் (24). சட்டப் படிப்பு படித்தவர். கடந்த 7​ந்தேதி இரவு வெளியே சென்ற வக்கீல் சதீஷ்குமார் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுபற்றி அவரது தந்தை வக்கீல் சங்கரசுப்பு திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் காணாமல் போன வக்கீல் சதீஷ்குமாரின் மோட்டார்சைக்கிள் ஐ.சி.எப். வடக்கு காலனி ஏரி அருகே கண்டெடுக்கப்பட்டது. அதில் அவரது செல்போனும் இருந்தது.  ஆனால் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து சங்கரசுப்பு சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார். இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி மாலை வக்கீல் சதீஷ்குமார் உடல் ஐ.சி.எப். வடக்கு காலனி ஏரியில் மிதந்தது. போலீசாரும் தீயணைப்பு படையினரும் விரைந்து சென்று அவரது உடலை மீட்டனர். இது பற்றி கருத்து தெரிவித்திருந்த அவரது தந்தை வழக்கறிஞர் சங்கரசுப்பு, போலீசார் கூலிப்படையை ஏவி எனது மகனை கொலை செய்திருக்க வேண்டும் என கருதுகிறேன். பிரேத பரிசோதனையின் போது நான் சொல்லும் டாக்டர் ஒருவரும் உடன் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வக்கீல் சதீஷ்குமார் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. காலை 8.15 மணிக்கு பிரேத பரிசோதனை தொடங்கியது. 3 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். அரசு டாக்டர்கள் சாந்தகுமார், முருகேஷ், சங்கர சுப்பு தரப்பு டாக்டர் சம்பத்குமார் ஆகியோர் பிரேத பரிசோதனை செய்தனர். விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு உடன் இருந்தார். பிரேத பரிசோதனையின்போது அரசு தரப்பில் ஒரு வீடியோவும், சங்கரசுப்பு தரப்பில் ஒரு வீடியோவும் எடுக்கப்பட்டது. அரசு தரப்பில் போட்டோகிராபர் ஒருவரும் அனுமதிக்கப்பட்டிருந்தார். முற்பகல் 11.30 மணியளவில் பிரேத பரிசோதனை முடிந்து சதீஷ்குமாரின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 12 மணியளவில் அவரது உடலை வீட்டுக்கு எடுத்து செல்ல வேனில் ஏற்றினார்கள். அப்போது அங்கு திரண்டிருந்த வக்கீல்கள். வக்கீல் சதீஷ் குமார் கொலைக்கு காரண மானவர்களை உடனே கைது செய்ய வேண்டும் நீதி வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினர். வக்கீல் சதீஷ்குமார் கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டுள்ளார் என்று அவரது உறவினர்களும், வக்கீல்களும் புகார் தெரிவித்தனர். உடலில் கயிற்றால் கட்டப்பட்ட காயம் இருந்ததாகவும் எனவே அவரை கொன்று கயிற்றை கட்டி ஏரியில் வீசியதாகவும் கூறினார்கள். இதற்கிடையே வக்கீல் சதீஷ்குமார் உடலை ஏற்றிய வேன் ஆஸ்பத்திரியில் இருந்து புறப்பட்டது. அப்போது வேனின் முன்பு வக்கீல்கள் கோஷம் போட்டப்படியே nullந்தமல்லி நெடுஞ்சாலை வாசல் வரை சென்றனர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் நிலவியது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவரும் வக்கீலுமான ஆம்ஸ்ட்ராங் மற்றும் வக்கீல்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் அங்கு திரண்டிருந்தனர். வக்கீல் சதீஷ்குமார் உடல் பிரேத பரிசோதனை நடந்ததையொட்டி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிரேத பரிசோதனை அறைக்கு வரும் வழியில் 3 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த சோதனை நடத்தப்பட்டது. கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் பவானீஸ்வரி, உதவி கமிஷனர்கள் கலிதீர்த்தான், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் 50​க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony