முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரப்ஜித்சிங்கை சகோதரி சந்திக்க பாகிஸ்தான் அனுமதி

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

லாகூர், ஜுன், 16 - பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர் சரப்ஜித்சிங்கை சந்தித்து பேச அவரது சகோதரிக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக இந்திய நாட்டில் உள்ள பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சரப்ஜித்சிங் என்பவர் மீது பாகிஸ்தான் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் சரப்ஜித் சிங்கிற்கு லாகூர் கோர்ட் மரண தண்டனை விதித்து தீர்ப்புக் கூறியது. இந்த மரண தண்டனையை ரத்துசெய்யக் கோரி பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டும் கூட அந்த மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது. சரப்ஜித்சிங் குடும்பத்தினர் விடுத்த வேண்டுகோளை அடுத்து அவரது தூக்கு தண்டனையை நிறுத்திவைக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு இந்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. ஆனால் அந்த வேண்டுகோளுக்கு பாகிஸ்தான் இதுவரை செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் சரப்ஜித்சிங்கை சந்தித்து பேச லாகூர் ஐகோர்ட்டில் அவரது சகோதரி தல்பீர் கவுர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை தல்பீர் கவுர் சார்பில் வழக்கறிஞர் அவாய்ஸ் ஷேக் தாக்கல் செய்தார். இந்த மனுமீது விசாரணை நடத்திய ஐகோர்ட் தலைமை நீதிபதி இஜாஜ் சவுத்திரி, கோட் லக்பத் சிறையில் உள்ள சரப்ஜித்சிங்கை சந்தித்து பேச தல்பீர் கவுருக்கு அனுமதி வழங்கினார். இதையடுத்து அவர் இன்று தனது சகோதரனை பாகிஸ்தானில் உள்ள கோட்லக்பத் சிறையில் சந்தித்து பேச இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்