முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் மசோதா விவகாரத்தில் கருத்து வேறுபாடா?

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி,ஜூன்.16 ​- லோக்பால் வரைவு மசோதா தயாரிப்பதில் கருத்துவேறுபாடு என்று கூறுவது வெறும் நாடகம் என்று உத்திரப்பிரதேச மாநில முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார். ஊழல் புரிந்தவர்களை விசாரிக்கும் வகையில் லோக்பால் அமைப்பை ஏற்படுத்த லோக்பால் வரைவு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியில் சிவில் உறுப்பினர்கள் அண்ணா ஹசரே உள்பட 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு சார்பாகவும் 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த கமிட்டியானது லோக்பால் வரைவு மசோதாவை தயாரிப்பதில் மத்திய அரசு பிரதிநிதிகளுக்கும் சிவில் பிரதிநிதிகளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்று கூறுவது வெறும் நாடகமாகும். லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதை தவிர்க்கவே இந்த நாடகத்தை மத்திய அரசு நடத்துகிறது. அதனால் கமிட்டியில் உள்ள சிவில் உறுப்பினர்கள் மக்களிடம் சென்று பிரச்சினைகளை எடுத்துக்கூறி தங்கள் கருத்துப்படி மசோதா நிறைவேற மக்களின் ஆதரவை திரட்ட வேண்டும் என்று மாயாவதி யோசனை கூறியுள்ளார். சிவில் உறுப்பினர்களுக்கும் மத்திய அரசு பிரதிநிதிகளுக்கும் இடையே நாடகம் நடக்கிறது. அதனால் சிவில் உறுப்பினர்கள் உஷாராக இருப்பதோடு மக்களிடம் சென்று தங்களுடைய கருத்துக்கு ஆதரவை திரட்டி வரும் லோக்சபை கூட்டத்திலேயே மசோதாவை நிறைவேற்றிவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றும் மாயாவதி மேலும் கூறினார். தற்போதுள்ள சூழ்நிலையில் லோக்பால் மசோதா மீண்டும் கிடப்பில் போடப்படும் என்று தெரிகிறது. சிவில் உறுப்பினர்கள் விருப்பப்படி நிறைவேறாது என்றும் கூறப்படுகிறது. அதனால்தான் சிவில் உறுப்பினர்களுக்கு இந்த யோசனையை நான் கூறியுள்ளேன் என்றும் மாயாவதி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்