முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களிடையே கவுன்சிலை புத்துயிரூட்ட வேண்டுகோள்

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.16 - மாநிலங்களின் பிரச்சினைகளை விவாதித்து தீர்வுகான மாநிலங்களுக்கிடையேயான கவுன்சிலை புத்துயிரூட்ட வேண்டும் என்று பாரதிய ஜனதா தலைவர் எல்.கே. அத்வானி யோசனை தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் குறித்து எல்.கே.அத்வானி மேலும் கூறியதாவது:-

நாட்டில் உள்ள மாநிலங்களிலும் மாநிலங்களுக்கிடையேயும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இந்த பிரச்சினைகள் குறித்து விவாதித்து அவைகளுக்கு சுமூகமான முறையில் தீர்வுகாண வேண்டும். இதற்கு மாநிலங்களுக்கிடையேயான கவுன்சிலை மீண்டும் புத்துயுரூட்ட வேண்டும். மாநிலங்களுக்கிடையே பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண கடந்த 1983-ம் ஆண்டு சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷனை அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி நியமித்தார். மாநிலங்களுக்கிடையே ஏராளமான பிரச்சினைகள் உள்ளன என்றும் அந்த பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வுகாணப்படாமல் இருக்கின்றன என்றும் சர்க்காரியா கமிஷன் தெரிவித்தது. இந்த பிரச்சினைகள் குறித்து பிராந்திய அளவிலும் மாநிலங்கள் அளவிலும் கருத்து வேறுபாடு இருக்கிறது என்றும் சர்க்காரிய கமிஷன் தெரிவித்தது. மாநிலங்களுக்கிடையே ஏராளமான பிரச்சினைகள் இருந்ததால் மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் அமைக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. அரசியல் சட்டம் 263-வது பிரிவின்படி மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் அமைக்க வேண்டும். ஆனால் 1990-ம் ஆண்டுதான் இந்த கவுன்சில் அமைக்கப்பட்டது. 1990-ம் ஆண்டு அமைக்கப்பட்டாலும் 1998-ம் ஆண்டு வரை இந்த கவுன்சில் செயல்படாமலேயே இருந்தது.

இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்