முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிக பாதுகாப்பு கொடுக்க முதியவர்கள் கோரிக்கை

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.15 - தலைநகர் டெல்லியில் முதியோர்களுக்கெதிரான வன்முறை மற்றும் கிரிமினல்,புறக்கணிப்பு குற்றங்கள் அதிகரித்து வருவதால் தங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று முதியோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

10 பிள்ளையை ஒரு தகப்பன் வளர்ப்பான். ஆனால் அந்த 10 பிள்ளைகளும் ஒரு தகப்பனை கவனிக்காமல் அலையவிடுவார்கள் என்று கூறுவது உண்மை என்று நிரூபிக்கும் வகையில் டெல்லியில் உள்ள முதியோர்களுக்கு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் முதியோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேமாதிரி அவர்களுக்கெதிரான வன்முறை, கிரிமினல், அவர்களை பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் புறக்கணிக்கும் குற்றம் ஆகியவைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் தங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எங்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று டெல்லி மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு தலைவர் எஸ்.எல்.பாச்சி தெரிவித்துள்ளார். 

இன்று மூத்த குடிமக்களுக்கெதிரான துஷ்பிரயோக தடுப்பு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி டெல்லியில் நேற்று தன்னார்வு தொண்டு அமைப்பு சார்பாக முதியவர்களுக்கு பாதுகாப்பு என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கு நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்களில் பேசிய பாச்சி மேற்கண்டவாறு கூறினார். முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். அதனால் எங்களை போன்ற முதியோர்களை அவர்கள் கவனிப்பதில்லை என்றும் பாச்சி மேலும் கூறினார். முதியோர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் போலீசார் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்