முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் அருகே நடந்த விபத்தில் 11 பேர் பலி

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

நாமக்கல் ஜூன்.16 - நாமக்கல் அருகே வேன் - லாரி நேருக்கு மோதிய விபத்தில் 7 பெண்கள் உட்பட 11 பேர் பலியாயினர். தஞ்சாவூர் மாவட்டம் திருப்பன்துருத்தி பகுதியை சேர்ந்த சுமார் 30 பேர் ஒரு மகேந்திரா வேனில் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரியும் கந்தசாமியின் தாயார் இறந்ததற்கும் இரு தினங்களுக்கு முன்பு கவுன்சிலர் விஸ்வநாதன் துக்கம் விசாரிக்கு வந்துள்ளனர். 

இறந்தவர்களுக்கு  துக்கம் விசாரித்துவிட்டு மீண்டும் தஞ்சாவூர் செல்வதற்காக குறுக்கு வழியான வளையப்பட்டி வழியாக சென்றுள்ளனர். இவர்களது மகேந்திரா வேன் ராசிபாளையம் என்ற இடத்தில் கலைமகள் மெட்ரிக் பள்ளி அருகே வந்தபோது இவர்களுக்கு கரும்பு சக்கை ஏற்றிய டாரஸ் லாரி எதிரே வந்துள்ளது. 

இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியது. இதில் மகேந்திரா வேன் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். 

படுகாயம் அடைந்தவர்களை மோகனூரில் உள்ள அரசு மருத்துவமனையிலும், அங்குள்ள தனியார் மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் ஒருவரும் அரசு மருத்துவமனையில் 3 பேரும் இறந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்தவர்களை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி 4 பேரும் இறந்துள்ளனர். 

இந்த விபத்தில் சாந்தி, காமாட்சி, பார்வதி, ஆகிராசு, கலாவதி, nullநிலாவதி, கலைமகள் உட்பட 7 பெண்களும், துரைமாணிக்கம், ராஜேந்திரன் உட்பட 4 ஆண்களும் ஆக மொத்தம் 11 பேர் இறந்துள்ளனர்.

மேலும் இதில் படுகாயமடைந்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் 9 பெண்கள், 4 ஆண்கள், 1 குழந்தை ஆக 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

சம்பவ இடத்திற்கு நாமக்கல் கலெக்டர் குமரகுருபரன், காவல் கண்காணிப்பாளர் பிரவின்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சீத்தாலட்சுமி, நாமக்கல் எம்.எல்.ஏ கே.பி.பி.பாஸ்கர் ஆகியோர் காயமடைந்தவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினர். இதில் எம்.எல்.ஏ. கே.பி.பி பாஸ்கர் மற்றும் அ.தி.மு.க வினர்  ஆரம்பம் முதலே மருத்துவமனையில் தேவையான உதவிகளை செய்து வருகிறார். இந்த விபத்து குறித்து மோகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்