முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.13 லட்சம் மதிப்புள்ள கடல் குதிரைகள் பறிமுதல்

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

ராமநாதபுரம் ஜூன் 16, வெளிநாட்டுக்கு கடத்த இருந்த ரூ 13 லட்சம் மதிப்புள்ள அரியவகை கடல்வாழ் உயிரினமான கடல்குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். உலகிலேயே அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் அதிகம் வசிக்கும் பகுதி மன்னார் வளைகுடா கடற்பகுதியாகும். இங்கு கடல்குதிரை, கடல்பல்லி, ஆவுலியா எனப்படும் கடல்பசு, சுறா, திமிங்கலம், கடல் அட்டை போன்ற கடல்வாழ் உயிரினங்கள் வசிக்கின்றன. மன்னார் வளைகுடா கடற்பகுதி கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்களின் உயிரின ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. 

ஆனால் கடல்குதிரை போன்ற அரியவகை கடல்வாழ் உயிரினங்களை பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. குதிரை இந்தியாவில் உணவுப்பொருளாக பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் சீனா, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சூப் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. கடல்குதிரை மூலம் ஆண்மை விருத்தி லேகியம் தயாரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் தங்களுக்கு கிடைத்த தகவலின்படி சோதனை நடத்திய வனத்துறையினர் வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக தயார் நிலையில் வைத்திருந்த 2500 கடல் குதிரைகளை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ 13 லட்சம் ஆகும். இது தொடர்பாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 3 பேரை வனத்துறையினர்கைது செய்துள்ளனர். இந்த தகவலை மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின பாதுகாவலர் சுந்தரகுமார் ராமநாதபுரத்தில் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony