முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிக நேரம் தொலைக்காட்சி... விரைவில் மரணம்

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

 

பாஸ்டன்,ஜூன்.15 - தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்தால் பல்வேறு நோய்கள் வருவதோடு முன்கூட்டியே மரணம் ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 

தொலைக்காட்சியை மக்கள் பார்ப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் ஓய்வு பெற்றவர்கள், முதியவர்கள், வீடுகளில் இருக்கும் பெண்களுக்கு பொழுது போகாமல் அதிக நேரம் தொலைக்காட்சியை பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒருசிலர் விருப்பப்பட்டு பல மணி நேரம் தொலைக்காட்சியை பார்ப்பதும் உண்டு இப்படி அதிகநேரம் பார்ப்பதால் சர்க்கரை நோய் வருவதற்கும், இருதய நோய் ஏற்படுவகழ்ரும்  முன்கூட்டியே மரணம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள ஹார்டுவார்டு சுகாதார ஆய்வாளர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர். ஒரு நாளைக்கு 2 மணி நேரம் தொலைக்காட்சி பார்த்தால் 2-வது வகையான சர்க்கரை நோய் 20 சதவீதம் அதிகரிப்பதற்கும் இருதய நோய் 15 சதவீதம் அதிகரிப்பதற்கும் 15 சதவீதம் அதிகரிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது என்றும் மேலும் இயற்கையாக மரணம் அடைவதற்கு முன்பே சாவு ஏற்படுவதற்கும் 13 சதவீதம் வாய்ப்பு உள்ளது என்றும் அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் டி.வி.பார்ப்பதை குறைத்துக்கொண்டால் இந்த நோய்களை தவிர்ப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று அந்த ஆய்வு மையத்தின் பேராசிரியர் பிராங்க் ஹூ தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago