முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்ஜ் கோட்டையில் தலைமை செயலகம் தொடரலாம்

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜூன்16 -செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தலைமை செயலகம் செயல்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என்று கூறிவிட்டது. சென்னையிலுள்ள புதிய தலைமைச் செயலகம் கட்டிடத்திலிருந்து சட்டசபையை ஜெயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தவிட்டது. மேலும் விசாரணையை ஜூன் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்தது. 

இந்நிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த nullநீதிபதிகள் தலைமைச் செயலகம் ஜெயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்படுவதற்கு தடை விதிக்க இயலாது என பொது நல வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது எனவும் nullநீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony