முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்திரிகையாளர் கொலை: கைதான 3 பேர் விடுதலை

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை,ஜூன்.17 - மும்பையில் மூத்த பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரில் 3 பேர் நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

மும்பையில் மூத்த பத்திரிகையாளர் ஜே.தேவ் கடந்த 11-ம் தேதி 4 பேர்களால் சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக நேற்றுமுன்தினம் 4 பேர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களில் ஒருவர் புனே நகரை சேர்ந்தவர்கள் மற்ற 3 பேர் மும்பையை சேர்ந்தவர்கள். இந்த 4 பேரும் மும்பை பிரபல தாதா சோட்டா சகீல் என்பவனுடன் தொடர்புடையவர்கள் என்றும் அதனால் இந்த படுகொலைக்கும் சோட்டாசகீலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகித்தனர்.  

இந்தநிலையில் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேர்களில் அன்வார், மதீன் இக்பால் ஹதேலா ஆகியோர்களை போலீசார் விடுவித்துவிட்டனர். ஆனால் தேவைப்படும்போது விசாரணைக்கு அழைத்தால் வரவேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். ஆனால் அதற்கு மேல் அவர் விளக்கம் அளிக்க மறுத்துவிட்டார். இந்த 3 பேரும் தானே மாவட்டம் அருகே உள்ள மம்பரா பகுதியில் பொவாய் காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் கிரைம் பிராஞ்ச் போலீசார்களிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். அன்வார் வைத்திருந்த ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 11-ம் தேதி ஜே.தேவை படுகொலை செய்ய இந்த காரைத்தான் கொலையாளிகள் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகித்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்