முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. விரைவில் விசாரணை

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 17 - 2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஊழல் தொடர்பாக மத்திய அமைச்சர் தயாநிநி மாறனிடம் இந்த மாத இறுதியில் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு - 

அலை வரிசை ஊழல் தொடர்பாக, ஆ. ராசா, கனி மொழி மற்றும் பல்வேறு தொழில் அதிபர்கள் தொலை தொடர்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இரண்டு குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. 

அலை வரிசை ஊழலில் அரசுக்கு ரூ. 30 ஆயிரம் கோடிக்கு மேல் இழப் பு ஏற்பட்டுள்ளதாக சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பணம் எங்கே உள்ளது என்று கண்டு பிடிக்க சி.பி.ஐ. அதிகாரி கள் மொரீஷியஸ் நாட்டுக்கு சென்று வந்து விட்டனர். 

இந்த வழக்கில் 3 -வது குற்றப் பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ய உள்ளனர். இதற்காக மத்திய அமைச்சர்  தயாநிதி மாறன் தொலை தொடர்பு துறையில் இருந்த போது, நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க தொடங்கியுள்ளனர்.

ஏற்கனவே தொழில் அதிபர் சிவசங்கரன், தன்னை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மிரட்டியதால் ஏர்செல் நிறுவனத்தை விற்க நேர்ந்த தாக சி.பி.ஐ.யிடம் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். 

இந்த வாக்கு மூலத்தில் உள்ள தகவல்களை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். அதன் அடிப்படையில், இந்த மாத இறுதியி ல், தயாநிதி மாறனுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க இருக்கிறார்கள். 

சிவசங்கரன் வாக்கு மூலம் கடந்த 6 -ம் தேதி பெறப்பட்டது. இந்த வாக்கு மூலத்தில் பெறப்பட்ட தகவல்களையும், தொலை தொடர்பு த் துறை ஆவணங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து விசாரிக்க உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்