முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீஞ்சூர் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை: மத்திய நிலைக்குழு ஆய்வு

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.17 - மீஞ்சூர் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையை மத்திய நிலைக்குழு ஆய்வு செய்தது. மீஞ்சூர் காட்டுப்பள்ளி காலாஞ்சியில் கடல்நீரை சுத்திகரிப்பு செய்து குடிநீராக்கும் ஆலை உள்ளது. நாள் ஒன்றுக்கு 10 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வட சென்னை மக்களுக்கு வழங்கும் இந்த கடல்நீர் சுத்தரிப்பு ஆலையில் நிலை குறித்து கண்டறிவதற்காக மத்திய நிலை குழுவினர் அதன் தலைவர் திப்கோகல் தலைமையில் வந்தனர்.

இக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் வேணுகோபால், கன்சியாம் அனுராசி,  ஷெர்சிங்குபாயா, பத்திராம்ஜாக்கர், எஸ்.பி.ஒய்.ரெட்டி மற்றும் ராஜ்ஜியசபா உறுப்பினர்களான குமார்தீபக்தாஸ், ஞானதேசிகன் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். பின்னர் கடல்நீர் எவ்வகையில் குடிநீராக சுத்திகரிக்கப்படுகிறது,

அதன் தன்மை என்ன? ஆகியவற்றை அங்கிருந்த பணியாளர்களிடம் கேட்டறிந்தனர். இதுகுறித்து மத்திய நிலைக்குழு தலைவர் திப்கோகல் கூறுகையில் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் நிலத்தடி நீர் குறைந்து மழையின்மை காரணமாக குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அத்தகைய மாநிலங்களில் தண்ணீர் தேவையை பூர்த்திசெய்ய இதுபோன்ற திட்டத்தை நடைமுறைபடுத்துவது குறித்து மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

முன்னதாக இக்குழுவினர் பூண்டி, புழல் ஆகிய நீர் தேக்கங்களையும் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்