முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் வீட்டில் விஷ தேனீக்கள் விரட்டியடிப்பு

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.17 - வீட்டுவசதி துறை அமைச்சர் வைத்தியலிங்கம் குடியிருக்கும் அரசு வீட்டில் மரத்தில் கூடுகட்டியிருந்த விஷத் தேனீக்களை தீயணைப்பு துறையினர் விரட்டி அடித்தனர்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைச்சர்கள் குடியிருக்கும் அரசு குடியிருப்புகள் உள்ளது. அமைச்சர்கள், தலைமை நீதிபதி, நீதிபதிகள் குடியிருக்கின்றனர். இந்த குடியிருப்பில் வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்திய லிங்கம் குடியிருந்து வருகிறார்.

அமைச்சர் வீட்டுக்கு தினம் தினம் தமிழகம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அமைச்சரின் வீடு அருகே புன்னமரம் ஒன்று உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான தேனீக்கள் கூடுகட்டி இருந்தன. இவை கடுமையான விஷத் தேனீக்கள் என்றும் மொத்தமாக சேர்ந்து கொட்டினால் உயிருக்கே ஆபத்து விளைய வாய்ப்புள்ளது என்பதால் அமைச்சர் அலுவலகத்திலிருந்து விஷத் தேனீக்களை விரட்ட தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

உடனடியாக தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து 20 அடி உயர கம்பியால் தீப்பந்தத்தை கட்டி தேனீக்களை விரட்டி அடித்து கூட்டை கலைத்தனர். சிறப்பாக செயல்பட்ட தீயணைப்பு  துறையினரை அமைச்சர் பாராட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்