முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனா அணை: அசாம் முதல்வரிடம் எஸ்.எஸ். கிருஷ்ணா உறுதி

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூன்.17 - பிரமபுத்திரா நதியின் குறுக்கே சீனா பல அணைகளை கட்டுவதால் நதிநீர் திருப்பிவிடப்படாது என்றும் அதனால் கவலைப்பட வேண்டாம் என்றும் அசாம் மாநில முதல்வர் தரூண் கோகாய்க்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எஸ். கிருஷ்ணா உறுதி அளித்துள்ளார். 

இமயமலைப்பகுதியில் திபெத் நாடு இருக்கிறது. இந்த நாட்டை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது. அதோடு மட்டுமல்லாது இமயமலைப்பகுதிகளில் பல சாலைகளை அமைத்து வருகிறது. பல நதிகளின் குறுக்கே அணைகளை கட்டி தண்ணீரை பெருக்கி வருகிறது. இதனால் இந்தியாவுக்குள் வரும் நதிகள் சீனா பக்கம் திருப்பி விடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் கங்கை, நிதிக்கு அடுத்தபடியாக பிரமபுத்திரா நதியில் தண்ணீர் ஓடுகிறது. இதனால் அருணாசலப்பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்கள் பயன் அடைந்து வருகின்றன. இந்த நதி திபெத் நாட்டிற்கு தென்மேற்கே இமயமலையில் உற்பத்தியாகி வருகிறது. இந்த நிதியின் குறுக்கே சீனா வரம்புமீறி பல அணைகளை கட்டி வருகிறது. இதனால் பிரமபுத்திரா நதி தண்ணீரை பெருக்கி சீனா பக்கம் திருப்பிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை அசாம் மாநில காங்கிரஸ் முதல்வர் தரூண் கோகாய் நேற்று சந்தித்து புகார் செய்தார். அப்போது பிரமபுத்திரா நதியின் குறுக்கே சீனா அணைகளை கட்டுவதால் பயப்படத்தேவை இல்லை என்றார். தண்ணீர் தேக்குவதற்காக அணைகள் கட்டப்படவில்லை. மின்சார உற்பத்திக்காக சுமார 6000 கோடி செலவில் அணைகள் கட்டப்பட்டு வருகின்றன. அணைகள் கட்டப்பட்டு வருவதை இந்திய செயற்கைகோள்கள் கண்காணித்து வருகின்றன. அதனால் அசாம், அருணாசலப்பிரதேச மாநில மக்கள் பயப்படத்தேவையில்லை என்று தரூண்கோகாயிடம் எஸ்.எம். கிருஷ்ணா எடுத்துக்கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony