முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குளச்சல் மீன்பிடி துறைமுக பணி: அமைச்சர் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

 

நாகர்கோவில்,ஜூன்.17 - குளச்சலில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணியை வனத்துறை அமைச்சர் பச்சைமால் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழக வனத்துறை அமைச்சர் கே.டி. பச்சைமால் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக குளச்சல் வந்தார். பின்னர் அவர் குளச்சல் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மீனவர்கள் அமைச்சரிடம் கிழக்கு கடல் அரிப்பு, தடுப்பு சுவரை 100 மீட்டர் தூரத்துக்கு நீட்டிப்பு செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

அதற்கு அமைச்சர் முதல்வரிடம் சொல்லி சுவரை மேலும் நீட்டிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆய்வின் போது நாகர்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் ஏ. முருகேசன், டி. மனோகரன், எஸ்.ஏ. அசோகன், காரவிளை செல்வன், சகாயம், குளச்சல் நகர செயலாளர் அருள்தாஸ், குருந்தன்கோடு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வேலுதாஸ், விசைப்படகு சங்க தலைவர் பான்பாஸ், செயலாளர் பிரான்சிஸ், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் பிள்ளை, மாவட்ட இலக்கிய அணி துணை தலைவர் ஆறுமுகராஜா, மாவிளை ஜன்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago