முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோத்ரா ரயில் எரிப்பு தண்டனை விவரம் வரும் 1 ல் அறிவிப்பு

சனிக்கிழமை, 26 பெப்ரவரி 2011      இந்தியா
Image Unavailable

 

அமதாபாத்,பிப்.27 - கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் வரும் 1 ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை முடிந்து 31 பேர் குற்றவாளிகள் என கடந்த 22 ம் தேதி சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. வழக்கில் இருந்து 63 பேர் விடுவிக்கப்பட்டனர். இந்த 31 பேருக்கும் வரும் 1 ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என்று நீதிபதி ஆர்.ஆர். பட்டேல் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 31 பேருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் கோரப்பட்டது. 

கடந்த 2002 ம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் குஜராத்தில் கோத்ரா ரயில் நிலையம் அருகே வந்த போது அங்கு கூடியிருந்த சிலர் ரயில் பெட்டிகளுக்கு தீ வைத்தனர். இந்த கோர சம்பவத்தில் 59 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து குஜராத் மாநிலத்தில் வன்முறை வெடித்தது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கரசேவகர்கள் பயணம் செய்த குறிப்பிட்ட ரயில் பெட்டிக்கு மட்டும் தீ வைக்கப்பட்டதில் சதி வேலை இருப்பதாக கூறப்பட்டதை நீதிமன்றம் ஏற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்