முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழலுக்கு எதிரான பிரச்சாரம் தொடரும் ​- ராம்தேவ்

புதன்கிழமை, 15 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

 

டேராடூன், ஜூன் 15 - கடந்த 2 நாட்களுக்கு முன்பு உண்ணாவிரதத்தை நிறுத்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த யோகா குரு பாபா ராம்தேவ், நேற்று டிஸ்சார்ஜ் ஆனார். ஊழலுக்கு எதிரான தனது பிரச்சாரம் தொடரும் என்று டிஸ்சார்ஜ் ஆனபிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

கறுப்புப் பணம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக பிரபல யோகா குரு பாபாராம்தேவ் கடந்த 4 ம் தேதி டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். ஆனால் அவரை அன்று நள்ளிரவே டெல்லி போலீசார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றி விமானம் மூலம் டேராடூனுக்கு கொண்டுசென்றனர். பிறகு அங்கிருந்து அவர் ஹரித்துவாரில் உள்ள அவரது ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பிறகு தனது சொந்த ஆசிரமமான பதஞ்சலி ஆசிரமத்திலேயே  ராம்தேவ் தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டதை அடுத்து டாக்டர்களின் அறிவுரைப்படி அவர் தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார்.  இதையடுத்து டேராடூனில் உள்ள ஹிமாலயன் ஆஸ்பிட்டல் என்ற தனியார்  மருத்துவமனை ஒன்றில் பாபா ராம்தேவ் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து உடல்நலம் தேறிய பாபா ராம்தேவ், நேற்று அந்த மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டிஸ்சார்ஸ் ஆன பிறகு பாபா ராம்தேவ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஊழலற்ற சுத்தமான பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் மட்டுமே பாராளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் செல்ல வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம் என்றார். வெளிநாடுகளில் ரூ.4 லட்சம் கோடிக்கு கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த பணத்தை மீட்டு மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதையே நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றும் ராம்தேர் கூறினார். ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தும் நாங்கள் எந்த பாவத்தையும் செய்யவில்லை. வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை கொண்டுவர வேண்டும். நாட்டு மக்களின் ஆதரவுடன் எங்களது உயிர் மூச்சு உள்ளவரை ஊழலுக்கு எதிரான எங்களது போராட்டம் தொடரும் என்றும் ராம்தேவ் கூறினார். 

46 வயதான ராம்தேவ் மேலும் கூறுகையில், மக்களின் நல்வாழ்விற்காகத்தான் எங்களது இயக்கம் செயல்பட்டு வருகிறது. விவசாயிகளின் குழந்தைகள் டாக்டர்களாகவும், என்ஜினீயர்களாகவும் வரவேண்டும் என்பதற்காகத்தான் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் நடத்தி வருகிறோம் என்றும் அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago