முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை: கேமரூன்

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

 

லண்டன்,ஜூன்.18 - விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரின் போது இலங்கை ராணுவத்தின் போர்க்குற்ற விதிமீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2009 ம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிக்கட்ட போரின் போது புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த போரின் போது போர் விதிமீறல் நடந்துள்ளதாக பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டின. இலங்கை அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தின. இலங்கையில் போர்க்குற்றங்கள் நடைபெற்றது உண்மை என்று ஐ.நா. சபை நடத்திய விசாரணையிலும் தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில் தமிழக சட்டப் பேரவையிலும் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு இலங்கை போர்க்குற்ற விசாரணை குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றியது. இந்நிலையில் இங்கிலாந்து தொலைக்காட்சி ஒன்றில் தமிழர்கள் கொலை செய்யப்படும் காட்சிகள் சில தினங்களுக்கு முன் வெளியாகின. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அப்பட்டமாக நடந்துள்ளன. ஆகவே இது குறித்து இலங்கை சுதந்திரமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கேமரூன் தெரிவித்தார். இதை ஏற்காவிட்டால் இலங்கை மீது நடவடிக்கை எடுக்க மற்ற உலக நாடுகளுடன் சேர்ந்து குரல் கொடுக்கும் என்று இங்கிலாந்தின் வெளியுறவு அமைச்சர் அலிஸ்டர்பாட் கூறினார். இதனிடையே லண்டனில் உள்ள இலங்கை தூதரகம், தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. அது ஜோடிக்கப்பட்டவை என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்