முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு அவசர நிலை பிரகடனத்தை எதிர்நோக்கியுள்ளது

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

விஜயவாடா,ஜூன்.18 - காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் எதேச்சதிகார ஆட்சியால் நாடு மற்றொரு அவசரநிலை பிரகடனத்தை எதிர்நோக்கியுள்ளது. அதை முறியடிக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையாநாயுடு தெரிவித்துள்ளார். 

ஆந்திர மாநிலம் விஜயவாடா நகருக்கு வந்த வெங்கையாநாயுடு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொடூர தன்மையாலும் எதேச்சதிகார ஆட்சியாலும் நாடு மற்றொரு அவசர நிலை பிரகடனத்தை எதிர்நோக்கியுள்ளது. அதனால் மக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றார். மன்மோகன் அரசு ஊழல் நிறைந்த அரசாக இருக்கிறது. ஊழலை மறைப்பதற்காகவும் அரசின் நிர்வாகம் அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்ததை மறைப்பதற்காகவும் இதர கட்சியினர்களை மன்மோகன் சிங் அரசானது பிறரை குற்றஞ்சாட்டி வருகிறது. ஊழலுக்கு எதிராக போராடி வருபவர்களை மன்மோகன் சிங் அரசு அச்சுறுத்தல் செய்வதோடு மிரட்டியும் வருகிறது. ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்து வந்தவர்கள் என்று மத்திய அரசு குற்றஞ்சாட்டி வருகிறது. ஊழலில் சிக்கித்தவிப்பவர்களை தண்டிக்க மத்திய அரசு விரும்பவில்லை. சுப்ரீம்கோர்ட்டு தலையிட்டதாலும் பத்திரிகைகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலாலுமே ஊழலில் சிக்கிய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அண்ணா ஹசரே, பாபா ராம்தேவ் ஆகியோரை முதலில் மத்திய அரசு முக்கியமானவர்கள் என்று மத்திய அரசு கூறியது. பின்னர் அவர்களை ஊழல்வாதிகள் என்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும் குற்றஞ்சாட்ட தொடங்கியது என்றும் வெங்கையா நாயுடு மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்