முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை பணி: அமைச்சர் ஆய்வு

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜூன்.18 - அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பணிகளை விரைவு படுத்த அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடைபெற்று வரும் பணிகளை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று ஆய்வு செய்தார். ஆலைக்கு வந்த அமைச்சருக்கு ஆலை தொழிலாளர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்காக இயங்கி வரும் நியாயவிலைக்கடையினை கூட்டுறவுத்துறை அமைச்சர் பார்வையிட்டு பொருட்கள் இருப்பு மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்து தொழிலாளர்களுக்கு தொழிலாளர்களுக்கு சரியான அளவில் குறித்த நேரத்தில் வழங்க வேண்டும். பில் வழங்கும் போது டபுள்கார்பன் உபயோகப்படுத்தப்படவேண்டும் என கடை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தினார். அதன் பின்பு சர்க்கரை ஆலையில் மின் உற்பத்தி செய்வதற்கான அடிப்படை மற்றும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். மின் உற்பத்திக்கான பணிகள் தொய்வாக நடைபெற்று வருவது குறித்து அலுவலர்களிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அலுவலர்கள் மின் உற்பத்திக்கான கட்டுமான பணிகளை செய்து நிறுவனம் தமிழ்நாட்டில் 11 அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் பணிகளை செய்து வருவதால் பணிகள் தாமதமாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

   இதை கேட்ட அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சம்பந்தப்பட்ட நிறுவனத்தை உடனடியாக தொடர்பு கொண்டு அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 15 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் பணியினை விரைவுபடுத்த தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தனி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதன் பிறகு சர்க்கரை ஆலையின் தனி அரவை இயந்திரத்தை பழுது பார்க்கும் பணியினை பார்வையிட்ட அமைச்சர் அந்த பணியையும் விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் எம்.வி.கருப்பையா எம்.எல்.ஏ, அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கை ஆலை தனி அலுவலர் ஆர்.ந்தகோபால் கலந்து கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony