முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேதாஜிக்கு புதுடெல்லியில் நினைவகம் அமைக்க முயற்சி

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.18 - சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி  சுபாஷ் சந்திர போஸூக்கு தலைநகர் டெல்லியில் நினைவகம் அமைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

பிரிட்டீஷாரை எதிர்த்து இந்திய தலைவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் கொள்கை வேறுபாட்டால் மிதவாத இயக்கத்தினர், தீவிரவாத இயக்கத்தினர் என்று இரு பிரிவுகளாக பிரிந்தனர். மகாத்மா காந்தி தலைமையில் மிதவாத இயக்கத்தினரும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் தீவிரவாத இயக்கத்தினரும் வெள்ளையருக்கு எதிராக போராடினர். ஜப்பான் நாட்டு உதவியுடன் இந்திய தேசிய ராணுவ படையை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடங்கி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினார். ஒரு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் காந்தி எதிர்ப்பையும் மீறி நேதாஜி வெற்றிபெற்றுவிட்டார். அப்படிப்பட்ட ஒரு மாபெரும் தலைவருக்கு தலைநகர் டெல்லியில் நினைவகம் அமைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. வங்கத்து சிங்கம் என்று அழைக்கப்பட்ட நேதாஜி பெயரில் டெல்லியில் அறக்கட்டளை இருக்கிறது. இந்த அறக்கட்டளையானது நேதாஜிக்கு நினைவகம் அமைக்க மத்திய அரசு ரூ.100 கோடி ஒதுக்க வேண்டும். மேலும் நினைவகத்திற்கு டெல்லி அரசு இடமும் ஒதுக்க வேண்டும் என்று கோரியுள்ளது. நேதாஜி அறக்கட்டளை உறுப்பினர்கள் நேற்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி,மத்திய அமைச்சர் கபில் சிபல், கமல்நாத் ஆகியோர்களை சந்தித்து நிதி ஒதுக்கும்படி கேட்டுக்கொண்டனர். இதை அறக்கட்டளையின் தலைமை ஆலோசகரும் லோக்சபையின் முன்னாள் சபாநாயகருமான எ.சங்மா நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். டெல்லியின் புறநகர் பகுதியில் இடஒதுக்கீடு செய்ய டெல்லி அரசு சம்மதித்துள்ளது. ஆனால் டெல்லி மாநகராட்சி பகுதியில் நில ஒதுக்கீடு செய்யும்படி டெல்லி அரசை நேதாஜி அறக்கட்டளை வலியுறுத்தி வருகிறது. மேலும் 3 ஏக்கர் பரப்பளவு உள்ள பங்களாவும் வேண்டும் என்று அறக்கட்டளை வற்புறுத்தி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago