முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. பொதுச் செயலாளராக மீண்டும் பான்-கீ-மூன் தேர்வு?

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

ஐ.நா.ஜூன்.18 - ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக பான் கீ மூன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என்று தெரிகிறது. ஐக்கிய நாடுகளின் சபை பொதுச்யெலாளராக பான் கீ மூன் இருக்கிறார். இவர் தென்கொரியா நாட்டை சேர்ந்தவர். பான் கீ மூன் மீண்டும் ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவருக்கு அமெரிக்கா, ரஷ்யா, உள்பட முக்கிய நாடுகள் ஆதரவை தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் செல்வாக்கு பெற்றவர். பான் கீ மூன் மீண்டும் போட்டியிடுவேன் என்று அறிவித்தவுடன் அவருக்கு முதலில் சீனா ஆதரவை தெரிவித்தது. ஏனென்றால் பொதுச்செயலாளர் பதவிக்கு இந்தியர் யாரும் போட்டிபோட்டுவிடக்கூடாது என்பதுதான் அதன் நோக்கமாகும். மேலும் ஐக்கிய நாடுகளின் சபையில் அதிகாரம் படைத்த அமைப்பாக இருக்கும் பாதுகாப்பு கவுன்சிலும் பான் கீ மூனுக்கு முழு ஆதரவை இன்று தெரிவிக்கும் என்று தெரிகிறது. பாதுகாப்பு சபையின் கூட்டம் இன்று அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் மூனுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று தெரிகிறது. பாதுகாப்பு சபையில் உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ஆகிய நாடுகள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துவிட்டன. நேற்று கடைசியாக ஆதரவு அளிக்கப்படும் என்று ரஷ்யாவும் அறிவித்துள்ளது. அதனால் பான் கீ மூன் மீண்டும் ஐக்கிய நாடுகளின் சபை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது. ஐக்கிய நாடுகள் சபையில் மொத்தம் 192 நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் இந்தியாவை தவிர மற்ற நாடுகள் எதாவது ஒரு வல்லரசு நாட்டின் சொல்படிதான் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு கவுனிசிலில் உள்ள இதர நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் பான் கீன் மூனுக்குத்தான் ஆதரவு தெரிவித்துள்ளன. பான் கீன் மூனுக்கு லத்தீன் அமெரிக்க நாடுகள்தான் இன்னும் தங்களுடைய முடிவை தெரிவிக்கவில்லை. பாதுகாப்பு சபை கூட்டம் கூடும் முன்னர் லத்தீன் அமெரிக்க நாடுகள் கூட்டம் கூடி ஒரு முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அடுத்த செவ்வாய் கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago