முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு: திமுக எம்.எல்.ஏ ஆஜர்

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

கடலாடி ஜூன் 18, முதுகுளத்தூர் கோர்ட்டில் தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு சம்பந்தமாக திமுக எம்.எல்.ஏ. சுப.தங்கவேலன் உள்பட திமுக பிரமுகர்கள் ஆஜராகினர்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது முதுகுளத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் சத்தியமூர்த்திக்கு ஆதரவாக திமுக பிரமுகர்கள் கடலாடியில் பிரச்சாரம் செய்தனர். பிரச்சாரத்தின்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.அதே போல் சாயல்குடியிலும் தேர்தல் விதிமுறைகளை திமுக-வினர் மீறியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்கு சம்பந்தமாக முதுகுளத்தூர் கோர்ட்டில் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சரவணக்குமார் முன்பு திமுக பிரமுகர்களான எம்.எல்.ஏ. சுப.தங்கவேலன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், கடலாடி சேர்மன் ராஜசேகர், ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன், ஒன்றிய கவுன்சிலர் மனோகரன், நகர செயலாளர் சோலை உள்பட 20 பேர் ஆஜராகினர். இவ்வழக்கில் வழக்கறிஞர்கள் அரிச்சந்திரன், முனியசாமி, மயில்வேல், ஹசன் அலி, மங்களநாதன், வேலவன், முருகேசன் ஆகியோர் திமுக பிரமுகர்களை ஆஜர்படுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony