முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கம் வரும் முதல்வருக்கு வரவேற்பளிக்க தீர்மானம்

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

திருச்சி. ஜூன்.18 - முதல்வர் ஜெயலலிதா நாளை முதல் 3 நாட்களுக்கு ஸ்ரீரங்கம் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்கிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது தொடர்பாக திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயல்வீரர்கள், வீராங்கணைகள் ஆசோசனை கூட்டம் திருச்சி பாலக்கரை மீனாட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவும் தலைமை வகித்தார். அனைவரையும் அவைத்தலைவர் வெல்லமண்டி நடராஜன் வரவேற்று பேசினார். திருச்சி எம்.பி.குமார், ஆலங்குடி எம்.எல்.ஏ கு.ப.கிருஷ்ணன், ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் பரஞ்ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னாள் மாவட்ட செயலாளர்கள் முருகையன், கே.கே.பாலசுப்பிரமணியன், பேரவை செயலாளர் சீனிவாசன், மீனவரணி செயலாளர் கண்ணதாசன், மகளிர் அணி செயலாளர் தமிழரசி, மாவட்ட இணை செயலாளர் வளர்மதி, முன்னாள் செயற்குழு உறுப்பினர் அக்தர் பாபு, பொதுக்குழு உறுப்பினர் முத்துலெட்சுமி முருகேசன், பாசறை இணை செயலாளர் பெஸ்ட் பாபு, பகுதி செயலாளர்கள் வெல்லமண்டி சண்முகம், கலிலூர் ரஹ்மான், கவுன்சிலர் ஏ.பி.கிருஷ்ணமூர்த்தி, கேபிள் தினகரன், அஸ்ரப் ஜான், மார்க்கெட் சிங்கமுத்து, ஈஸ்வரன், பாசறை வெங்கடேசன், கே.கே.நகர் மிஸ்டர் கார்த்திகேயன், கே.கே.நகர் வினோத், அண்டகொண்டான் அப்பாக்குட்டி, ரகமத்துல்லா, ரவி, வீரங்கநல்லூர் வீரமணி, பிலிம் நாகராஜன், பெரியார் நகர் ரவிசங்கர், திருவானைக்காவல் கேசவன், தென்னூர் அப்துல் ரஹ்மான் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு நன்றியும் வணக்கத்தையும் தெரிவித்துகொள்கிறது. ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றியையும், அரசு நிலத்திட்டங்களை வழங்கவும் வருகை தரும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

முன்னதாக மறைந்த தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் மரியம்பிச்சை மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்