முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்று திறனாளி பெண்களுக்கு உதவித்தொகை அதிகரிப்பு

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூன்.18 - சமூக நலத்துறையின் திருமண உதவித்திட்டத்தின் வழங்கப்படுவதைப்போல், மாற்று திறனாளிகள் துறையின் சார்பில், மாற்று திறனாளி பட்டதாரி பெண்களுக்கான திருமண நிதியுதவியாக,  ரூ.50 ஆயிரம் ரொக்கமும், தாலிக்கு 1/2 பவுன் தங்கமும் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தபடி சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும், ஐந்து திருமண திட்டங்களின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் 25,000 ரூபாய் திருமண நிதி உதவியோடு, மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் (22 கேரட்) தங்கம் இலவசமாக வழங்கவும், இளம் பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக, இளநிலைப்பட்டம் அல்லது டிப்ளோமா பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித்தொகையை 25,000 ரூபாயிலிருந்து 50 ஆயிராமாக உயர்த்தியும் மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் (22 கேரட்) தங்கம் இலவசமாக வடங்கவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா 16.5.11 அன்று ஆணையிட்டு 6.6.11 அன்று இத்திட்டத்தை தொடங்கிவைத்தார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ், பார்வையறேறோரை நல்ல நிலையிலுள்ள நபர் திருமணம் செய்து கொள்வது, காதுகேளாதோர் மற்றும் வாய்பேசாதோரை நல்ல நிலையிலுள்ள நபர் திருமணம் செய்து கொள்வது, கை அல்லது கால் இழந்தோரை நல்ல நிலையிலுள்ள நபர் திருமணம் செய்து கொள்வது மற்றும் மாற்றுத் திறனாளிகளை மாற்றுத் திறனாளிகள் திருமணம் செய்து கொள்வது என நான்கு வகை திட்டங்களின் கீழ் திருமண நிதியுதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட திட்டங்களின் கீழ் பயன்பெறும் மாற்றுத்திறன் படைத்த பயனாளிகளும் சமூகநலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திருமண நிதியுதவி திட்டங்களால் பயனடைவது போன்றே பயன்பெற முதல்வர் ஜெயலலிதா, 25 ஆயிரம் திருமண நிதி உதவியோடு, மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் (22 கேரட்) தங்கம் இலவசமாக வழங்கவும, இளம் பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக, இளநிலைப்பட்டம் அல்லது டிபப்ளோமா பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித்தொகையை 25 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாக உயர்த்தியும், மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் (22 கேரட்) தங்கம் இலவசமாக வழங்கவும் 15.6.11 அன்று ஆணையிட்டுள்ளார். இத்திட்டத்தினால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 1 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony