முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழலுக்கு எதிராக பா.ஜ.க. நாடு தழுவிய போராட்டம்

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி,ஜூன்.18 - ஊழலுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி வரும் 23 ம் தேதி தொடங்கி வைக்கிறார். டெல்லி தல்கோத்ரா ஸ்டேடியத்தில் தொடங்கும் இந்த போராட்டத்தை தொடர்ந்து 15 நாட்களில் நகரின் 300 முக்கிய இடங்களில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக டெல்லி பா.ஜ.க. தலைவர் விஜந்தர் குப்தா கூறுகையில், 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் முறைகேடு ஆகியவற்றில் தொடர்புடையவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. முறைகேட்டில் தொடர்புடையவர்களை பாதுகாக்கும் முயற்சியில் அரசு ஈடுபடுகிறது. 

டெல்லியில் நடைபெற்ற ராம்தேவின் உண்ணாவிரத போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியதன் மூலம் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன. சம்பவம் நடைபெற்று 12 நாட்களாகியும் டெல்லி அரசாங்கம் எவ்வித விசாரணைக்கும் உத்தரவிடவில்லை. ஊழலுக்கு எதிராக லோக்பால் சட்ட மசோதா வரும் நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதி அளித்தது. இதனை இப்போது மீறியுள்ளது. 

அனைத்து விவகாரங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக வரும் 23 ம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை மூத்த தலைவர் அத்வானி டெல்லியில் தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் டெல்லியில் உள்ள 300 முக்கிய இடங்களில் நாள்தோறும் பிரச்சார கூட்டங்கள், போராட்டங்கள் 15 நாட்களுக்கு நடத்தப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago