முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாமியார்கள் மீது தடியடி வெட்கக்கேடானது - மேனகா

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

 

பதாவூன், ஜூன் 19 - சாதுக்கள் மீதும் சாமியார்கள் மீதும் ஜீயர்கள் மீதும் தடியடி நடத்துவது வெட்கக்கேடானது என்று மேனகா காந்தி கூறியுள்ளார்.சாமியார்கள் மீதும் சாதுக்கள் மற்றும் ஜீயர்கள் மீதும் போலீசாரை விட்டு தடியடி பிரயோகம் செய்வது வெட்கமற்ற செயல் என்று மத்திய அரசை பா.ஜ.க. எம்.பி. மேனகா காந்தி  கடிந்துரைத்துள்ளார்.

டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த யோகா குரு பாபா ராம்தேவ் மீது போலீசாரை ஏவிவிட்டு தடியடி பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து மத்திய அரசு எந்த அளவுக்கு மட்டமான காரியங்களில் ஈடுபட்டு வருகிறது என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொண்டார்கள் என்று மேனகா காந்தி கூறினார்.

காங்கிரஸ் கட்சிக்கு வெட்கமில்லை. மேலும்  மத்திய அரசு பொய் சொல்வதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

ராம்லீலா மைதானத்தில் கடந்த 5 ம் தேதி போலீசார் பாபா ராம்தேவ் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் எடுத்த நடவடிக்கை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் போலீஸ் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் தாங்கள் தடியடி நடத்தவில்லை என்று அப்பட்டமான பொய் உரைக்கப்பட்டுள்ளது என்றும் மேனகா கூறினார்.

முறையான அனுமதி பெற்ற பிறகே ராம்தேவ் டெல்லியில் சத்யாகிரக போராட்டத்தை துவக்கினார்.ஆனால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது வெட்கமற்ற செயலாகும் என்றும் அவர் கூறினார்.

போலீசார் நடத்திய தடியடியில் ஏராளமான பேர்  காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவ காட்சிகளை செய்தி சேனல்களில் பல கோடி மக்கள் பார்த்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக் விஜய் சிங் யோசிக்காமல் பேசுகிறார்.  அவர் தனது சொந்த கருத்துக்களை திணிக்கிறார் என்றும் மேனகா குற்றம்சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago