முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்க்கண்டில் பள்ளிக் கட்டிடம் வெடிகுண்டு வைத்து தகர்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

கார்வா, ஜுன் 19 - ஜார்க்கண்ட் மாநிலத்தில் கார்வா மாவட்டத்தில் பள்ளிக் கட்டிடம் ஒன்றை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து தகர்த்தனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் நக்ஸலைட்டு தீவிரவாதிகளின் ஆதிக்கம் இருந்துவருகிறது. இந்த தீவிரவாதிகளை ஒடுக்க மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை எடுத்துவந்தபோதிலும்கூட  இவர்கள் அடிக்கடி வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கார்வா மாவட்டம் கேட்டா என்ற கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடத்திற்கு நள்ளிரவு நேரத்தில் சுமார் 50 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். அந்த பள்ளிக்கூட கட்டிடத்திற்குள் வெடிகுண்டுகளை நிரப்பி அவற்றை வெடிக்கச் செய்தனர். இந்த சம்பவத்தில் நோகியா சமதா உயர்நிலைப் பள்ளிக் கட்டிடத்தின் நான்கில் மூன்று பகுதி பலத்த சேதம் அடைந்தது. சம்பவம் நடந்தது இரவு நேரம் என்பதால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. கடந்த வியாழக்கிழமை அன்று ஜார்க்கண்ட், பீகார், வடக்கு சட்டீஸ்கர் பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் 24 மணி நேர பந்த் போராட்டத்தை நடத்தினர். அந்த பந்த் போராட்டத்தின்போதே இந்த பள்ளிக் கட்டிடத்தை தகர்க்க இவர்கள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அப்போது அதிகமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்ததால், அப்போது அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை. அதன்பிறகுதான் இந்த பள்ளிக் கட்டிடத்தை இப்போது இவர்கள் வெடிகுண்டு வைத்து தகர்த்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago