முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

24 ஆண்டுகள் சிறையிலிருந்த 108 வயது கைதி விடுதலை

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

கோரக்பூர், ஜுன் 19 - உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஒரு சிறைச்சாலையில் 24 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த 108 வயது நபர் ஒருவர் நேற்று விடுதலை செய்யப்பட்டார். கடந்த 1987 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் மகராஜ்கஞ்ச் மாவட்டத்தில் பகவத்பாண்டே என்பவரையும் மேலும் 3 பேரையும் படுகொலை செய்த வழக்கில் கோரக்பூரைச் சேர்ந்த பிரிஜ் பிகாரி பாண்டே மற்றும் 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டபோது பிகாரி பாண்டேவுக்கு 84 வயது. அவர் கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் கோரக்பூரில் உள்ள ஒரு சிறையில் தனது சிறை வாசத்தை கழித்தார். அவரது சிறை தண்டனை முடிந்ததால் அவரை விடுதலை செய்ய சிறை அதிகாரிகள் முடிவு செய்தனர். 

இந்த கொலை வழக்கில் கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது பிகாரி பாண்டேவுக்கும் மற்ற குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனைக் காலம் ஏற்கனவே பல ஆண்டுகள் சிறையில் இருந்ததாலும் ஆயுள் தண்டனை காலம் முடிவடைந்ததாலும் பிகாரி பாண்டே நேற்று விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு இப்போது வயது 108. இந்தியாவிலேயே அதிக வயதான சிறைக்கைதி இவர்தான். இவர் தனது சிறை வாசத்தின்போது கிட்டத்தட்ட படுக்கையிலேயே இருந்திருக்கிறார். சில சமயம் இவருக்கு மருத்துவ சிகிச்சையும் செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்