முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி சொத்து விபரங்களை விரைவில் அறிவிக்கிறார்

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜுன் 19 - ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் தனது சொத்து விபரங்களை விரைவில் அறிவிக்க முடிவு செய்திருக்கிறார். ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை கொண்டுவர மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எங்கும் எதிலும் ஊழல் இருக்கக்கூடாது. பதவியில் இருப்பவர்கள் அளவுக்கு மீறிய சொத்துக்களை குவிக்கக்கூடாது என்ற அடிப்படை நோக்கத்தில் இந்த லோக்பால் மசோதா கொண்டுவரப்படுகிறது. 

இந்த நிலையில் மற்றவர்களுக்கு முன்னுதாரனமாக இருக்க ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் தனது சொத்து விபரங்களை விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளார். இந்தியாவில் ஒரு ஜனாதிபதி தனது சொத்து விபரங்களை வெளியிடுவது இதுவே முதல்முறையாக இருக்கும். ஜனாதிபதி தனது சொத்து விபரங்களை பகிரங்கமாக அறிவித்தே ஆகவேண்டும் என்ற சட்டம் எதுவும் நடைமுறையில் இல்லை. ஆனாலும்கூட பிரதீபா பாட்டீல் தானாகவே முன்வந்து தனது சொத்து விபரங்களை வெளியிட முடிவு செய்திருக்கிறார்.

தனது மற்றும் தனது குடும்பத்தின் சொத்து விபரங்களை பகிரங்கமாக வெளியிடுவதும் வெளியிடாததும் ஜனாதிபதியின் விருப்பத்தை பொருத்தது என்று மத்திய தகவல் ஆணையம் சமீபத்தில் தனது யோசனையை தெரிவித்து இருந்தது. இந்த ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் தனது சொத்து விபரங்களை வெளியிட முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி தனது சொத்து விபரங்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், பிரதீபா பாட்டீல் தனது சொத்கு விபரத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார் என்று ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் அர்ச்சனா தத்தா தெரிவித்தார். 

ஜனாதிபதி குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் தங்களது சொத்து விபரங்களை அறிவிப்பார்களா என்று அர்ச்சனா தத்தாவிடம் கேட்டதற்கு ஜனாதிபதியை பற்றி மட்டும்தான் தான் கருத்துக் கூற முடியும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்