முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெல்கிக்கு மேலும் 10 ஆண்டு சிறை

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புனே,ஜூன்.19 - முத்திரைத்தாள் மோசடி மன்னன் அப்துல் கரீம் தெல்கிக்கு புனே கோர்ட்டு 10 ஆண்டுகள் கடும் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது. போலி முத்திரைதாள்களை விற்று ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்த தெல்கி மீது பல்வேறு காவல் நிலையங்களில் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல்வேறு கோர்ட்டுகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் புனே நாசிக் காவல் நிலையத்தில் தெல்கி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு புனே நகர தனிக்கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை முடிவில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் தெல்கிக்கு 10 ஆண்டுகள் கடும் தண்டனையும் ரூ.9 லட்சம் அபதாரம் வழங்கியும் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே புனே போலீசார் பதிவு செய்த வேறு வழக்கில் தெல்கிக்கு 13 ஆண்டுகள் கடும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2005-ம் ஆண்டு மும்பையில் உள்ள முலுந்து போலீசார் தொடர்ந்த வழக்கில் தெல்கிக்கு கடந்த 13-ம் தேதி புனே கோர்ட்டு 13 ஆண்டுகள் கடும் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி வெறும் தண்டனை வழங்கினால் மட்டும் போதாது. தெல்கி மற்றும் அவரது மனைவி, பிள்ளைகள் சொத்துக்களை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும். தெல்கி தற்போது பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த தண்டனை விபரத்தை தெல்கி வழக்கறிஞரே தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்