முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல்காந்திக்கு சவாலாக இருக்கும் உ.பி. சட்டசபைத் தேர்தல்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜுன் - 20 - நேற்று தனது 41 வது பிறந்த தினத்தை கொண்டாடிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்திக்கு இன்னும் ஓராண்டுக்குள் நடக்கும் உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் ஒரு மிகப் பெரும் சவாலாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

உத்தரபிரதேசத்தில் கடந்த 1989 ம் ஆண்டுமுதல் காங்கிரஸ் அல்லாத கட்சிகளே ஆட்சி செய்து வருகின்றன. அதற்கு முன்பாக சுமார் 40 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சிதான் உத்தரபிரதேசத்தில் தொடர்ந்து ஆட்சி செய்து வந்தது. இப்போது முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் இன்னும் ஓராண்டில் நிறைவு பெற இருக்கிறது. அதனால் உத்தரபிரதேச சட்டசபைக்கு 2012 ஆம் ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் மகனுமான ராகுல்காந்திக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல்காந்தி நேற்று தனது 41 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட வீழ்ச்சியை தூக்கி நிறுத்துவதற்கு ராகுல்காந்தி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். உ.பி. காங்கிரசுக்கு புத்துயிர் ஊட்டுவதற்கான நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். இவர் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு கொடுத்த ஊக்கத்தின் காரணமாகத்தான் கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் 80 எம்.பி. தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளைக் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 20 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சின் ஆட்சியை எப்படியாவது அமைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ராகுல்காந்தி உ.பி. காங்கிரசை வலுப்படுத்தி வருகிறார். 

அடுத்த பிரதமர் ராகுல்காந்திதான் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். பிரதமர் ஆவதற்கு உரிய அனைத்து தகுதிகளும் திறமைகளும் ராகுல்காந்திக்கு இருக்கிறது என்றும், எனவே அவர் ஒரு சிறந்த பிரதமராவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் திக்விஜய்சிங் போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் உறுதிபட கூறிவருகின்றனர். எனவே உத்தரபிரதேச தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கும் ராகுல்காந்திக்கும்  ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இருக்கும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்