முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவானியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம்: அமைச்சர் பார்வையிட்டார்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

பவானி, ஜுன் - 20 - பவானியில் புதிய பஸ் நிலையம் அருகில், கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற விரிவாக்க  கட்டிடத்தினை பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வீ.ராமலிங்கம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வீ.ராமலிங்கத்தை பவானி வழக்கறிஞர்கள் சார்பாக அ.தி.மு.க. மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் செந்தில்குமரன் சால்வை அணிவித்து வரவேற்றார். இதில் நாராயணன், பெருந்துறை தோப்பு என்.டி.வெங்கடாசலம், பவானி நகரசபைத் தலைவர் எம்.ஆர்.துரை, பவானி அ.தி.மு.க. நகரச் செயலாளர் கிருஷ்ணராஜ், பவானி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சிந்து சண்முகம், வழக்கறிஞர் கணேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

இந்த ஒருங்கிணைந்த நீதிமன்றம் ரூ. 5 கோடியே 28 லட்சம்   செலவில் கட்டப்படுவதாகவும், இதன் பணி வருகிற செப்டம்பர் மாதத்தில் நிறைவடையும் என்றும் அமைச்சர் கூறினார். அவர் மேலும் கூறுகையில், சாயத் தொழில் தற்போதுள்ள பிரச்சனைகள் தீரவும், ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆட்சிக் காலத்தில் அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்ட சொத்துக்கள் குறித்தும், அவ்வாறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago