முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சினிமா டைரக்டர் சங்க தேர்தல்: பாரதிராஜா வெற்றி

திங்கட்கிழமை, 20 ஜூன் 2011      சினிமா
Image Unavailable

சென்னை, ஜூன்.- 21 - தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. தலைவர் பதவிக்கு பாரதிராஜாவும், எஸ்.முரளியும் போட்டியிட்டனர். செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் பலர் போட்டியிட்டனர். கவிஞர் பிறைசூடன் தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்தினார். மாலை வரை மொத்தம் 1,279 ஓட்டுகள் பதிவானது.  இரவு 7 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் முடிவுகளை ஒரே நேரத்தில் அறிவிக்க வேண்டும் என்று இயக்குனர்கள் கருத்து தெரிவித்ததால் இரவில் ஓட்டு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. நேற்று காலை ஓட்டுகள் எண்ணப்பட்டன.
இதில் பாரதிராஜா 1003 வாக்குகள் பெற்று மீண்டும் தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றார். இயக்குனர் அமீர் 901 ஓட்டுகள் பெற்று செயலாளராக தேர்வானார்.   பொருளாளர் பதவிக்கு டைரக்டர் ஜனநாதன் போட்டியின்றி ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டார் துணைத் தலைவர்கள் பதவிக்கு சேரன், சமுத்திரக்கனி ஆகியோரும் போட்டியின்றி ஏகமனதாக தேர்வானார்கள். செயற்குழு உறுப்பினர்களுக்கான ஓட்டுகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்