முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தின் புதிய கவர்னர் யார்? மார்கரெட் ஆல்வாவுக்கு அதிக வாய்ப்பு

செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன் - 21 - தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவின் பதவிக்காலம்  முடிவடைந்து விட்டது. தமிழகத்தின்  புதிய கவர்னராகும் வாய்ப்பு காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான  மார்கரெட் ஆல்வாவுக்கு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக கவர்னராக சுர்ஜித்சிங் பர்னாலா இருந்துவந்தார். இவரது பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. பர்னாலா கடந்த 1990 ஆம் ஆண்டு தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டார். அப்போது மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பீகார் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு பதவி விலகினார். பிறகு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் மத்திய மந்திரியானார். அதன் பிறகு மீண்டும் 2004 ம் ஆண்டு தமிழகத்தின் கவர்னராக நியமிக்கப்பட்ட அவர் அதிலிருந்து தொடர்ந்து  கவர்னராக இருந்துவந்தார். இந்நிலையில் சுர்ஜித்சிங் பர்னாலாவின் பதவிக்காலம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இதனால் தமிழகத்தின் புதிய கவர்னர் யார் என்ற கேள்வி எழுந்தது. தமிழகத்தின் கவர்னராக பர்னாலாவே தொடர்வாரா அல்லது வேறு ஒருவர் அந்த பதவிக்கு நியமிக்கப்படுவாரா என்பதை இதுவரை மத்திய அரசு அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் தமிழகத்தின் கவர்னராக காங்கிரஸ் கட்சியின்  தலைவர்களில் ஒருவரான மார்கரெட் ஆல்வா, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன. இதில் மார்கரெட் ஆல்வா, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இவரே கவர்னராகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago