முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாண் கருவிகள் வாங்கி வாடகைக்கு விட அமைச்சர் செல்லுர் ராஜூ உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 21 - விவசாயிகள் பயன்பெற கூட்டுறவு சங்கங்கள் மூலம் வேளாண் கருவிகளை வாங்கி வாடகைக்கு விட அமைச்சர் செல்லுர் ராஜூ உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி நேற்று தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லுர் கே.ராஜூ தலைமையில் கூட்டுறவுத் துறையின் உயர் அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லுர் ராஜூ, முதல்வரின்  ஆணைக்கிணங்க ஏழை விவசாயிகள் அதிகளவில் பயன்பெறும் வகையில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வேளாண் கருவிகளை வாங்கி குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு விடவும், வேளாண் கருவிகள் பழுதடையும் பட்சத்தில் அதனை உடனடியாக சரிசெய்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.
மேலும், டெல்டா மாவட்டங்களுக்குத் தேவையான உரம், விதை, nullச்சி கொல்லி மருந்து மற்றும் பயிர்க்கடன்களை வழங்கவும், நகைக்கடன்கள் வழங்கும்போது நகைகளை நன்கு பரிசோதித்து தரமான நகையா என்பதை கண்டறிந்து கடன் வழங்கவும், நகைக்கடன் வழங்குவதில் தவறுகள் ஏற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்களை உட்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுரை வழங்கினார். கூட்டுறவு வங்கிகளை கணினிமயமாக்கும் பணிகளை விரைந்து செயல்படுத்தவும், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவு கடன் வழங்கவும் கேட்டுக்கொண்டார்.
அப்போது, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலம் இரண்டு பெட்ரோல் பங்குகள் தொடங்கப்படும் என அமைச்சரிடம்  அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர், அமைச்சர், பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் போன்றவை சரியான அளவில் வழங்கப்படுவதை உறுதி செய்து, பிரதிமாதம் அதற்கான அறிக்கையினை தயார் செய்து அனுப்பிவைக்கவும், மேலும், பொதுவிநியோகத் திட்டத்தில் தவறுகள் நடக்கும் பட்சத்தில் தவறு செய்யும் விற்பனையாளர் மற்றும் கண்காணிக்க தவறிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. மேலும், நியாயவிலைக் கடைகளில் பழுதடைந்துள்ள பில்லிங் இயந்திரங்களை அப்புறப்படுத்தி உடனடியாக புதிய பில்லிங்
இயந்திரங்களை பொருத்த உரிய நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொண்டார்.
வெளிச்சந்தையில் அதிக அளவில் போலி மருந்துகள் விற்பனை செய்வதை கட்டுப்படுத்திட முதல்வர் ஜெயலலிதாவின் அறிவுரையின்படி கூட்டுறவுத்துறையின் மூலம் அதிக அளவில் கூட்டுறவு மருந்தகங்கள் தொடங்கப்படும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்திடல், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலர் யத்தீந்திர நாத் ஸ்வேன், கூடுதல் பதிவாளர்கள் ந. அசோகன், க.பு.பெ.பன்னீர்செல்வன், அ.சங்கரலிங்கம், க.ம.தமிழரசன், ரா.ஜெயராம், இரா.ராஜேந்திரன், ம.ப.சிவன்அருள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்