முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.35 லட்சம் கடத்தல்; சாய்பாபா அறக்கட்டளை உறுப்பினர்களிடம் ஆந்திர போலீசார் தீவிர விசாரணை

புதன்கிழமை, 22 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்,ஜூன்.- 22 - ரூ.35 லட்சம் கடத்தல் விவகாரத்தில் சாய்பாபா அறக்கட்டளை உறுப்பினர்களிடம் ஆந்திர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சத்திய சாய்பாபா மரணம் அடைந்தது தொடர்பாக சில சந்தேகங்கள் எழுந்தன. அவரது மறைவுக்குப்பிறகு அறக்கட்டளை தொடர்பான பிரச்சினைகளும் வலுவடையத்தொடங்கியுள்ளன. சமீபத்தில் பிரசாந்தி நிலையத்தில் உள்ள யஜூர் மந்தரில் தங்கம், வெள்ளி, பணம் போன்றவை கணக்கு எடுக்கப்பட்டு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டதாக அறக்கட்டளை உறுப்பினர்கள் தெரிவித்தார்கள். இதற்கிடையே ரூ.35 லட்சம் ரொக்கப் பணத்தை கர்நாடக எல்லைப் பகுதியில் வைத்து போலீசார் கைப்பற்றினார்கள். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையைச்சேர்ந்த தொழிலதிபரும்,  சாய்பாபாஅறக்கட்டளை உறுப்பினருமான வேணு சீனிவாசனின் கார் டிரைவர் சந்திரசேகர் என்ற சேகர், பொறியாளர் சோகன்செட்டி ஆகியோர்  இந்துப்பூர் கூடுதல் ஜூடிசியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கமாகர்ரெட்டி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 23 -ம் தேதி வரைநீதிமன்றக் காவலில் வைக்குமாறு கமாகர்ரெட்டி உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட மற்றொரு பொறியாளரான ஹரீஸ் நந்தசெட்டி வரும் 27 -ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். வெள்ளி, தங்கம், விலை உயர்ந்த நவரத்தினங்கள்,ரொக்கப்பணம் ஆகியவற்றை வங்கியில் டெபாசிட் செய்து விட்டதாக அறக்கட்டளை உறுப்பினர்கள் கூறியுள்ள நிலையில் இந்த ரூ.35 லட்சம் வெளியேகொண்டு செல்லப்பட்டது ஏன்? என்பது மர்மமாகவே இருக்கிறது. ரூ. 35 லட்சம் கடத்தப்பட்ட விவகாரத்தில் மத்தியஅமைச்சர் ஒருவரிடம் மகனுக்கும், மாநில அமைச்சர் ஒருவருக்கும் தொடர்பு உண்டு என்று வீரபத்ராராவ் குற்றம் சாட்டியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட்டு செயலாளர் கே.நாராயணா, சாய்பாபா அறக்கட்டளையை அரசே ஏற்கவேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்