முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் ஹவாலா டீலரிடம் இருந்து ரூ.9.3 கோடி பணம் பறிமுதல்

புதன்கிழமை, 22 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜூன் - 22 - டெல்லியில் ஹவாலா டீலர் என்று கருதப்படும் ஒரு வர்த்தக தொழில் அதிபரின் அலுவலகத்தில் இருந்து ரூ. 9.3 கோடி பணத்தை மத்திய அமலாக்கப்பிரிவு  அதிகாரிகள் பறிமுதல்  செய்தனர். டெல்லியில் கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள ஒரு பிரபல வர்த்தக பிரமுகர்  அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டு வருவதாக மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு  தகவல் கிடைத்தது. இதை அடுத்து பங்கஜ்கபூர் என்ற அந்த  ஹவாலா டீலரின் அலுவலகத்தில் நேற்று முன் தினம் அமலாக்கப்பிரிவு  அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது  பல்வேறு ஆவணங்கள் மற்றும் பணப்பட்டுவாடா ரசீதுகள் ஆகியவற்றை அவர்கள் கைப்பற்றினர்.
அவரிடம் இருந்து ரூ. 9.3 கோடி பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அவர் மீது அன்னிய செலாவணி சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு  அதிகாரிகள்  வழக்கு  பதிவு  செய்துள்ளனர். நிதி முறைகேடுகள் தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கப்பிரிவு வட்டாரங்கள் கூறியுள்ளன.
இந்த ஹவாலா டீலருக்கு வேறு யார் யாருடன் தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்