முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பியில் இரு நாட்களில் 5 பெண்கள் கற்பழிப்பு விதவையை தீ வைத்து எரித்த கொடுமை

புதன்கிழமை, 22 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

லக்னோ,ஜூன்.- 22 - உத்தரபிரதேசத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண்ணை கற்பழித்த மூன்று பேர் அவரை தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதற்கிடையே மேலும் 2 இளம் பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இம்மாநிலத்தில் 5 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். உ.பியில் இரண்டு நாட்களுக்கு முன் குர்சகாய் கஞ்ச் அருகே உள்ள கட்வாபசர்க் பகுதியை சேர்ந்த 14 வயது பெண்ணை அதே கிராமத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கற்பழிக்க முயன்றனர். அந்த பெண் மறுத்ததால் இளைஞர்கள் அந்த பெண்ணின் கண்ணை குத்தி குருடாக்கி விட்டனர். மறறொரு கண்ணையும் காயப்படுத்தினர். மற்றொரு சம்பவத்தில் பஸ்தி அருகே ராணிப்பூர் பிலாடி கிராமத்தை சேர்ந்த 18 வயது பெண்ணை சதிசிங் என்பவர் துப்பாக்கியை காட்டி மிரட்டி கற்பழித்தார். இதற்கிடையே நேற்று எடா மாவட்டம் சபாபூர் கிராமத்தில் 35 வயதான விதவை பெண்ணை 3 இளைஞர்கள் கற்பழித்துள்ளனர். உண்மை தெரியாமல் இருக்க இரண்டு குழந்தைகளுக்கு தாயான அந்த பெண்ணை தீ வைத்து எரித்து விட்டனர். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. எனினும் போலீசார் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர்.
பிரோசாபாத் என்ற இடத்தில் 15 வயது பெண்ணை ஷானு மற்றும் அவரது உதவியாளர் சேர்ந்து கற்பழித்துள்ளனர். தற்போது ஷானு கைது செய்யப்பட்டுள்ளார். உ.பியில் பெண் முதல்வரான மாயாவதி ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு இல்லை. பாதிக்கப்படும் பெண்கள் விஷயத்திலும் இந்த அரசு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என மாநில காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணா தெரிவித்துள்ளார். ஆனால் கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony