முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழி தனி அறைக்கு மாற்றம்

புதன்கிழமை, 22 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஜூன்.- 23 - 2 ஜி வழக்கில் திகார் சிறையில் உள்ள தி.மு.க எம்.பி. கனிமொழி பாதுகாப்பு காரணங்களுக்காக தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  கடந்த மே மாதம் 20 ம் தேதி கைது செய்யப்பட்ட அவர், திகார் சிறை எண் 6 ல் அடைக்கப்பட்டிருந்தார். அவரோடு வேறு சில பெண் கைதிகளும் இருந்தனர். இப்போது அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். சக கைதிகளிடையே ஏற்படும் வன்முறை சம்பவங்களில் கனிமொழி சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக அவர், தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சிறை விதிகளை அவர் கண்டிப்புடன் கடைப்பிடிக்கிறார் என்று சிறை டி.ஐ.ஜி நீரஜ்குமார் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony