முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதி அமைச்சரை மத்திய அரசே உளவு பார்ப்பதா? சுஷ்மா சுவராஜ் கேள்வி

புதன்கிழமை, 22 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜூன். - 23 - மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் ஒட்டுக் கேட்பு கருவி பொறுத்தப்பட்டதாக வந்த தகவலை அடுத்து மத்திய நிதி அமைச்சரை மத்திய அரசே உளவு பார்ப்பதா? என்று பா.ஜ.க. தலை வர் சுஷ்மா சுவராஜ் கேள்வி எழுப்பி உள்ளார். மத்திய நிதி அமைச்சர் அலுவலகத்தை உளவுத் துறை ரகசியமாக கண் காணித்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு -
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அமைச்சக அலுவலகத்தி ல் மத்திய உளவுத் துறையினர் ஒட்டுக் கேட்பு கருவிகளை பொருத்தி கண்காணித்தது தெரிய வந்தது.
தனது அலுவலகத்தில் பாதுகாப்பு குறித்த ரகசிய விசாரணை நடத்தும் படி பிரதமருக்கு பிரணாப் முகர்ஜி கடிதம் எழுதினார். செப்டம்பர் 7 -ம் தேதி அவர் எழுதிய கடிதத்தில் தனது அலுவலகத்தில் 16 ரகசிய கண்காணிப்பு மற்றும் ஒட்டுக் கேட்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
என்றாலும் நேரடியாக ஒட்டுக் கேட்கும் மைக்ரோ போன் அல்லது ஒளிப்பதிவு கருவிகள் பொருத்தப்படவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து உளவுத் துறை அளித்த விளக்கத்தில் பிரணாப் முக ர்ஜி மேஜைக்கு அடியிலும், அவர் பகுதியிலும் சந்தேகத்துக்கு இடமா        ன வகையில் சில பொருட்கள் ஒட்டிக் கொண்டிருந்தன.
அவற்றை எடுத்து தடயவியல் சோதனை செய்தபோது, அந்த பொருட் கள் சூயிங்கம் என்று தெரிய வந்தது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஒட்டுக் கேட்பு பிரச்சினை குறித்து பிரணாப் முகர்ஜியிடம் கேட்ட போது, உளவுத் துறையினர் எனது அலுவலகத்தை ரகசியமாக கண் காணித்தது உண்மை. ஆனால் அந்த ரகசிய கண்காணிப்பு மூலம் எதை யும், அவர்கள் கண்டுபிடிக்கவில்லை என்று கூறினார்.
இது குறித்து பாரதீய ஜனதாவின் பாராளுமன்ற கட்சித் தலைவர் சுஷ் மா சுவராஜ் டியூட்டர் இணைய தளத்தில் வெளியிட்டுள்ள கருத்துக்க ள் வருமாறு -
மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்திலேயே பாது காப்பு விதி மீறப்பட்டுள்ளது. இதை சாதாரண பிரச்சினையாக கருத முடியாது. அவரது பாதுகாப்பு தொடர்பான இந்த பிரச்சினைக்கு மத் திய அரசு சரியான விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட வேண்டும்.
தனது நிதி அமைச்சரையே மத்திய அரசு உளவு பார்ப்பதா? இது என்ன  தனியார் நிறுவனமா? உளவுத் துறை அளித்துள்ள விளக்கத்தில் நிதி அமைச்சர் அலுவலக சுவரில் சூயிங்கம் இருந்ததாக கூறுவது விளை யாட்டுத்தனமாக உள்ளது. எனவே இந்தப் பிரச்சினை பற்றி அரசு முழு விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறியு ள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்