முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கையில் முதல்வர் மாயாவதி

வியாழக்கிழமை, 23 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

லக்னோ, ஜூன் - 23 - உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தவறிய உ.பி. அரசை கண்டித்து போராட்டங்களை நடத்தப்போவதாக அம்மாநில  காங்கிரஸ் கட்சியின்  தலைவர் ரீட்டா பகுகுணா அறிவித்துள்ளார். இந்த  நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் மாயாவதி எடுத்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை 6 மாதங்களில் முடிப்பதற்கு வசதியாக குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று அவர்  கூறியுள்ளார்.
 மேலும் பெண்களுக்கு எதிரான வழக்குகளை ஜாமீனில் வெளியே வரமுடியாத  வழக்குகளாக மாற்றவும் சட்ட திருத்தம்  கொண்டு வரப்படும் என்றும்  குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனை விதிக்கவும் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் அவர்  கூறினார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான வியூகங்களை ஆராய வருகிற 27-ம் தேதி உயர்  மட்டக்குழு கூட்டம் ஒன்றை கூட்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பென்களுக்கு எதிராக கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் அதிகரித்து வருவதால் அவற்றைத் தடுக்கவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்