முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் காங். அரசின் ஊழலற்ற ஆட்சி முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் பேட்டி

சனிக்கிழமை, 25 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்,ஜூன்.- 25 - கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஊழலற்ற ஆட்சி கோஷம் வெறும் நகைச்சுவையே தவிர வேறு எதுவும் இல்லை என்று மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.  கேரள சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தின் முதல் நாளன்று கவர்னர் உரையாற்றினார். இந்த உரை குறித்து கருத்து தெரிவிக்கும்படி கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான அச்சுதானந்தனிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிஅரசானது மாநிலத்தில் வரும் 5 ஆண்டுகளுக்கு வெளிப்படையான நிர்வாகம், ஊழலற்ற ஆட்சி என்ற கோஷமானது வெறும் நகைச்சுவையே தவிர வேறு ஒன்றும் இல்லை. அமைச்சரவையில் ஊழல் பெருச்சாளிகளை சேர்த்துவிட்டு ஊழலற்ற ஆட்சி நடத்துவோம் என்றால் அது எப்படி சாத்தியமாகும் என்று நிருபர்களை பார்த்து அச்சுதானந்தன் கேள்வி எழுப்பினார். கவர்னரின் உரையில்  முதல்வர் உம்மன்சாண்டி அறிவித்துள்ள 100 நாள் வேலை திட்டத்தை தவிர வேறு எதுவும் இல்லை. சொன்னதையே திரும்ப சொல்ல வைத்து கவர்னர் முட்டாளக்கப்பட்டுள்ளார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டமானது ஏற்கனவே எங்கள் ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. அதையே திருப்பி அறிவித்துள்ளனர். கவர்னர் உரையில் புதிய திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. கேரளத்தில் மலையாளம் மொழியை முதல் மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுப்பதில் அரசு கவனம் செலுத்தவில்லை. சுயநிதி கல்வி கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து அரசு எதுவும் தெரிவிக்காமல் மவுனம் சாதிக்கிறது என்றும் அச்சுதானந்தன் மேலும் கூறினார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்