முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விளை நிலங்களை ஆய்வு செய்ய நியமித்த குழுவுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும்- சி.சண்முகவேலு வேண்டுகோள்

சனிக்கிழமை, 25 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருப்பூர், ஜூன் - 24 - சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாய நிலத்தை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட வேளாண் ஆய்வு குழுவினருக்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் உடுமலை சி.சண்முகவேலு வேண்டுகோள் விடுத்துள்ளார். சாயக் கழிவு நீரால் பாதிக்கப்பட்டுள்ள நிலங்களை ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் திருப்பூர் ஊத்துக்குளி ஒன்றியம் ஆணைப்பாளையம் பகுதிகளில் சாய கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாய நிலம், ஆணைப்பாளையம் புதுத்தோட்டம் பகுதியில் உள்ள விவசாய கிணறு ஆகியவற்றை தமிழக தொழில்துறை அமைச்சர் சி.சண்முகவேலு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஒரத்துப்பாளையம் அணையின் மாசுபட்ட நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நலசங்க ஆலோசகர் ரங்கசாமி மற்றும் விவசாயிகள் அமைச்சரிடம் கடந்த தி.மு.க. ஆட்சியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை கிடைக்காமல் சம்பந்தம் இல்லாத பாதிக்கப்படாத விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது என்று முறையிட்டனர். 

இதன்பிறகு விவசாயிகளிடம் அமைச்சர் பேசியதாவது:-

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி வேளாண் விஞ்ஞானிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் சாயக் கழிவு நீரால் பாதிக்கப்பட்ட நொய்யல் ஆற்றங்கரையோரம் விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டு மண், கிணற்று நீரை எடுத்து ஆய்வு செய்ய உள்ளனர். 

ஒவ்வொரு கிராமத்தில் எஸ்.எப். நம்பர் விவசாயிகள் பெயர் வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆய்வுக் குழுவினருடன் விவசாயிகளும் இணைந்தே செயல்பட வேண்டும். வேளாண்மை விஞ்ஞானிகளுடன் இணைந்து மண், நீர் பரிசோதனை செய்ய விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மண், நீர் ஆகியவற்றின் தன்மையை பொறுத்து நிவாரண உதவி முறைப்படுத்தி விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதற்கு விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களை முறையாக பெயர் மாற்றம் செய்து தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும். 

இவ்வாறு அமைச்சர் உடுமலை சி.சண்முகவேலு தெரிவித்தார்.

முன்னதாக ஊத்துக்குளி பகுதியில் சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை தொழில்துறை அமைச்சர் சி.சண்முகவேலு, திருப்பூர் மாவட்ட கலெக்டர் எம்.மதிவாணன், ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் பெருந்துறை தோப்பு வெங்கடாசலம், திருப்பூர் வடக்குக எம்.எஸ்.எம்.ஆனந்தன், பல்லடம் கே.பி.பரமசிவம், மாவட்ட வருவாய் அதிகாரி கஜலட்சுமி, கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இயற்கை வள  மேலாண்மைத் துறை தனி அதிகாரி வேலு, கற்பகம், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராமசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி ரேணுகாதேவி மற்றும் பி.ஆர்.ஓ. அ.உமாபதி, ஏ.பி.ஆர்.ஓ. நல்லதம்பி, ஊத்துக்குளி ஒன்றிய கழகச் செயலாளர் ரவிசந்திரன் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள்  உடன் சென்றனர்  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago