முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றாலம் சீசனுக்கு வரும் உல்லாச பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் எம்.எல்.ஏ. சரத்குமார் நடவடிக்கை

சனிக்கிழமை, 25 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

தென்காசி. ஜூன். - 25 - குற்றாலம் சீசனுக்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை தேவைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தென்காசி எம்.எல்.ஏ. சரத்குமார்
தெரிவித்துள்ளார். தென்காசி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  குற்றாலத்தில் சீசனை முன்னிட்டு உல்லாசப் பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அவர்களுக்கு தேவையான சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை சிறப்பாக செய்திட அந்தந்த துறை அதிகாரிகளிடம் பேசி தீவிர நடவடிக்கை எடுத்துள்ளேன். மேலும் தென்காசி தொகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் உரிய ஆலோசணை நடத்தியுள்ளேன். மேலும் கூடுதல் குடிநீர் திட்டங்களை உருவாக்கவும் கேட்டு கொண்டுள்ளேன். மேலும தென்காசி நகராட்சி உட்பட தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, வாறுகால் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்படி கோரிக்கை வைத்துள்ளேன். எனவே அனைத்து பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்படும் இவ்வாறு தென்காசி எம்.எல்.ஏ. சரத்குமார் தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago