முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

சென்னை,ஜூன். - 26 - தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பாரதிய ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜ் நேற்று சந்தித்து பேசினார். அப்போது இலங்கை தமிழர்கள் பிரச்சினை குறித்து ஜெயலலிதாவுடன் சுஷ்மா சுவராஜ் விவாதித்தார்.  தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைத்துள்ளது. ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.  இந்தநிலையில் தமிழகம் வந்துள்ள பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சுஷ்மா சுவராஜ் எம்.பி. தமிழகம் வந்தார். திருச்செந்தூர் சென்று வழிபட்டார். அதனையடுத்து நேற்று சென்னை வந்தார். சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். அப்போது தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி பிடித்ததற்கும் ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வராக பதவி ஏற்றிருப்பதற்கும் சுஷ்மா சுவராஜ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். மேலும் இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி உள்ளனர். தமிழக மீனவர்கள் துயரை போக்கவும், இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழக சட்டசபையில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதுகுறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் சுஷ்மா சுவராஜ் விவாதித்தார்.
இந்த சந்திப்புக்கு பின்பு சுஷ்மா சுவராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டேன் என்றார். மேலும் இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக சட்டசபையில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இலங்கை பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் பிரச்சினையை பாரதிய ஜனதா எழுப்பும். அதனால் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள அந்த 2 தீர்மான நகல்களை கேட்டு பெற்றுள்ளேன். இந்த தீர்மானங்களில் கூறப்பட்டுள்ள விபரங்களை அறிந்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்றும் சுஷ்மா சுவராஜ் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்