முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராசா,கனிமொழி ஜாமீன் பெற்றால் பார்லி. கூட்டத்தில் பங்கேற்கலாம்-வீரப்ப மொய்லி

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஜூன்.- 26 - திகார் சிறையில் உள்ள தி.மு.க. எம்.பிக்கள் கனிமொழி, ராசா ஆகியோர் ஜாமீனில் விடுதலையானால் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்கலாம் என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்கு ஆளாவதாலேயே அவர்கள் நாடாளுமன்றவாதிகளாக இருக்க முடியாது என்று கூற இயலாது என்றும் அவர் தெரிவித்தார். 

லோக்பால் மசோதா தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை மத்திய அரசு ஜூலை 3 ம் தேதி கூட்டியுள்ளது. இந்த கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக மத்திய அரசு லோக்பால் மசோதா தொடர்பான விபரங்களை வெளியிட்டிருப்பது அனைத்து கட்சி தலைவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். லோக்பால் மசோதா தொடர்பாக 3 ம் தேதி கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவிக்கும் யோசனைகள் ஏற்புடையதாக இருந்தால் அவை வரைவு மசோதா அறிக்கையில் சேர்க்கப்படும். அத்துடன் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்திடம் கூடுதல் விவரங்களை சேர்க்குமாறு கோருவோம். 

அதை தொடர்ந்து வரைவு அறிக்கை அனைத்து அமைச்சகங்களுக்கும் அனுப்பப்படும். அவற்றின் கருத்து கேட்கப்படும். பின்னரே அமைச்சரைவையில் வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் பெறப்பட்டு நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படும். அதன் பிறகு நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு விடுவதா அல்லது விவாதத்துடன் நிறைவேற்றுவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்