முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல் சண்டைகளை கோவிலுக்கு இழுத்துச்செல்லக்கூடாது-கட்காரி கண்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

பெங்களூர்,ஜூன்.- 26 - அரசியல் சண்டைகளை கோவிலுக்கு இழுத்துச்செல்லக்கூடாது என்று எட்டியூரப்பாவுக்கு, நிதின் கட்காரி அறிவுரை வழங்கினார்.  எட்டியூரப்பாவுக்கு எதிரான ஊழல் ஆதாரங்களை வெலியிடப்போவதாக குமாரசாமி கவுடா கூறினார். இதை வெளியிடமால் இருக்க எட்டியூரப்பா தூது விட்டதாகவும் அவர்  குறிப்பிட்டார். இதை எட்டியூரப்பா மறுத்தார்.  அத்துடன், தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதர் ஆலயத்தில் சத்தியம் செய்யவும் தயார் என்று கூறினார். இந்த சவாலை குமாரசாமி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, நாளை கோவிலில் சத்தியம் செய்ய நாளும் குறிக்கப்பட்டது. இந்த நிலையில், இது போன்ற சத்தியம் தேவையில்லை என்று இருவருக்கும் பல்வேறு தலைவர் அறிவுரை கூறி வருகின்றார்கள். பாரதீய ஜனதா கட்சி தலைவர் நிதின் கட்காரி, இத்திடத்தை கைவிட வேண்டுமென எட்டியூரப்பாவை கேட்டுக்கொண்டுள்ளார்.
மத வழிபாட்டுத்தலங்களை இதுபோன்ற செயலுக்கு பயன்படுத்துவது தவறு.  அரசியல் சண்டைகளை கோவிலுக்குள் இழுத்துச் செல்லக்கூடாது இவற்றை சட்டப்பூர்வமாகத்தான் அணுகவேண்டும் என்று கட்காரி கூறியுள்ளார். இவரது கோரிக்கையை பரிசீலனை செய்யவும் எட்டியூரப்பா தீர்மானித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்