முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டீசல் விலை உயர்ந்தாலும் பஸ் கட்டணம் உயராது அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 26 - முதல்வர் ஜெயலலிதா ஆலோசனைப்படி பஸ் கட்டணம் உயராது என்று போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். டீசல் விலையை மத்திய அரசு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தி உள்ளது. மண்எண்ணை விலை லிட்டருக்கு 2 ரூபாயும் சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ. 50​ம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் விலைவாசி உயரும். எனவே டீசல், எரிவாயு, மண்எண்ணை விலையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார்.  டீசல் விலை உயர்வால் அரசு போக்குவரத்து துறைக்கும் செலவு பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. தனியார் ஆம்னி பஸ்கள் நேற்று முதல் கட்டணத்தை உயர்த்தி விட்டன. அரசு பஸ் கட்டணம் உயருமா? என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
இதுபற்றி போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:​
முதல்வர் ஜெயலலிதாவின் அரசு மக்கள் நல அரசாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு எந்த சுமையும் ஏற்படாத வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பொதுமக்களை பாதிக்கும் வகையில் எந்த கட்டணமும் உயராது என்று முதல்​அமைச்சர் அறிவித்துள்ளார். அந்த வகையில் டீசல் விலை உயர்ந்தாலும் அரசு பஸ் கட்டணம் உயராது. பல முறை டீசல் விலை உயர்ந்துள்ளது. ஆனாலும் அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
ஏழை​எளிய மக்கள் அரசு பஸ்களை அதிகம் பயன் படுத்துகிறார்கள். அதனால் பஸ் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் அம்மாவின் அரசிற்கு இல்லை. இதனால் போக்கு வரத்து கழகத்திற்கு ஏற்படும் இழப்பை முதல்​அமைச்சர் வழிகாட்டுதலின்படி சரி கட்டுவோம். தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கான பணி முதல்வரின் உத்தர வின்படி தீவிரமாக நடந்து வருகிறது. போக்குவரத்து கழகங்கள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் விண்ணப் பம் வினியோகிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பத்தில் போட்டோ ஒட்டி nullர்த்தி செய்து ஒப்படைத்தவுடன் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகங்கள் 8 பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றன. சென்னை பெருநகர் போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி ஆகிய போக்கு வரத்து கழகங்கள் மூலம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த 8 அரசு போக்கு வரத்து கழகத்திற்கும் நாள் ஒன்றுக்கு 17 லட்சத்து 55 ஆயிரம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. எண்ணை நிறுவனங்களிடம் இருந்து அரசு போக்கு வரத்து கழகத்திற்கு நேரிடையாக டீசல் வினியோகிக்கப்படுகிறது.
தற்போது டீசல் விலை ரூ.3 உயர்த்தப்பட்டதன் மூலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.52 லட்சத்து 65 ஆயிரம் கூடுதலாக செலவாகிறது. மாதத்திற்கு ரூ. 15 கோடியே 79  லட்சத்து 50 ஆயிரமும் வருடத்திற்கு ரூ.190 கோடியும் கூடுதல் செலவு ஏற்படும்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்